வெற்றி நெருக்கடியுடன் களமிறங்கும் சிஎஸ்கே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல் | CSK vs SRH match today IPL 2025
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி (-1.361) 9-வது இடத்திலும், சிஎஸ்கே (-1.392) 10-வது இடத்திலும் உள்ளன. இதனால் எஞ்சியுள்ள…









