TVK : ‘பட்ஜெட்டுக்காக காத்திருந்த விஜய்; பனையூரில் ‘மெட்ராஸ்’ பட அரசியல்!’ – தவெக மீட்டிங் ஹைலைட்ஸ்! | TVK Vijay Camp Highlights 01 02 2025
தவெக-வின் நான்காம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் இன்று பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். கோஷ்டி பூசல், மெட்ராஸ் பட பாணியிலான சுவர் அரசியல் என தகதகத்த தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் அப்டேட்ஸ் இங்கே.எப்போதும் மதியம் 12:30 மணியிலிருந்து மதியம் 1:30 க்குள் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த விஜய், இன்றைக்கு 3 மணிக்குத்தான் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். காலை முழுவதும் மத்திய பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அந்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருகை…