தமிழ்நாடு: நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜிபிஎஸ் நோயால் 9 வயது சிறுவன் உயிரிழப்பு – முக்கிய செய்திகள்
பட மூலாதாரம், Getty Images54 நிமிடங்களுக்கு முன்னர்க்யோன் பெர்ரே சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பால், சென்னையில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில், “மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். திருவள்ளூா் அருகே திருவூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரேம்குமாரின் மகன் பி.மைத்தீஸ்வரன் (9). சிறுவனுக்கு கடந்த ஜன. 22-ஆம் தேதி பள்ளிக்கு செல்ல முயன்ற…