Yearly Archives: 2025

Doctor Vikatan: கால்சியம் மாத்திரை எடுத்தால் கிட்னி ஸ்டோன் வருமா? | Will taking calcium tablets cause kidney stones?

மருந்துக் கடைகளில் நீங்களாக கால்சியம் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதுதான் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.  அவற்றின் அளவோ, எடுக்க வேண்டிய கால அளவோ, பக்க விளைவுகளோ உங்களுக்குத் தெரியாமல் எடுக்கும்போதுதான் பிரச்னையே.போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி உடலுழைப்பைச் செலுத்துவது,  துரித உணவுகளைச் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது, கிரில்டு சிக்கன், மட்டன் உணவுகள், அளவுக்கதிக பால், அளவுக்கதிக கீரை, சாக்லேட், சோயா பால்,  சோடியம் அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடுவதால்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.பார்பெக்யூ உணவுகளைச் சாப்பிடும் கலாசாரம்…

மத்திய பட்ஜெட் 2025: தொடர்ந்து 8வது முறையாக இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் (கோப்புப்படம்)ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.தொடர்ச்சியாக, 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 1959-64 காலகட்டத்தில்…

Concussion Substitute : ‘இந்திய அணி செய்தது சரிதானா?’ – விதிகள் என்ன சொல்கிறது? | Concussion Substitute Explainer

ஒரு வீரருக்கு தலை மற்றும் கழுத்துப் பகுதியில் அடிபட்டாலே இந்த Concussion Sub விதியை பயன்படுத்த முடியும். சிவம் துபே ஹெல்மட்டில் அடி வாங்கியிருக்கிறார். அவருக்கு லேசான தலைவலியும் இருந்திருக்கிறது. எனில், சிவம் துபேவுக்கு பதிலாக Concussion Sub ஐ பயன்படுத்துவோம் என முடிவெடுத்ததில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், யாரை பயன்படுத்தினார்கள் என்பதில்தான் பிரச்சனை.சிவம் துபே ஒரு ஆல்ரவுண்டர். ஹர்ஷித் ராணா ஒரு வேகப்பந்து வீச்சாளர். சிவம் துபேவை பல சமயங்களில் 2 ஓவர்கள் வீசுவதற்குதான்…

Thirumavalavan : ‘எந்த அரசியல் கணக்கும் இல்லை!’ – ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்! | Thirumavalavan about meeting with Aadhav Arjuna

திருமாவளவன் பேசுகையில், ‘ஆதவ், தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜூன் கட்சியை விட்டு வெளியேறுகிற சூழல் ஏற்பட்ட போது கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் அதை எதிராக நிறுத்தவில்லை. இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றாலும் உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள…

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: பிசிசிஐ சார்பில் இன்று வழங்கப்படுகிறது | Sachin Tendulkar to receive Lifetime Achievement Award

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994-ம் ஆண்டு இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கவுரவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த விருதினைப் பெறும் 31-வது நபர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 51 வயதான டெண்டுல்கர், இந்திய அணிக்காக 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக…

மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்2 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தையை ஒருவர் ஓடிச்சென்று பிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. டோம்பிவிலி பகுதியில் உள்ள 13 மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடி பால்கனியின் திறந்திருந்த இரும்புக் கதவு வழியாக ஒரு குழந்தை தவழ்ந்து வந்து தொங்கி பின் கீழே விழுந்ததாக ஊடகச் செய்திகள்…

த்ரில் வெற்றி: 17-வது முறையாக தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை | IND vs ENG 4-வது டி20 | IND beat ENG by 15 runs, win series

புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இந்தியா. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து…

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா சோனியா… எதிர்வினையாற்றிய ராஷ்டிரபதி பவன்; நடந்தது என்ன?

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று காலை தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரௌபதி முர்மு, “அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் ‘ஆரோக்கிய மந்திர்’ நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70…

Virat Kohli: 6 ரன்னில் க்ளீன் போல்ட்; மீண்டும் ஏமாற்றிய கோலி; ரஞ்சியில் தடுமாறும் சீனியர்ஸ் | virat kohli got out in just 6 runs after 12 years comeback in ranji trophy

இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு முக்கியமான காரணம் பேட்டிங் யூனிட் என்றால், அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும்தான்.ரோஹித், கோலிமறுபக்கம், தோல்வியின் எதிரொலியாக எழுந்த கடும் விமர்சனங்களால், இந்திய அணியில் விளையாடுபவர்கள் சர்வதேசத் தொடர்கள் இல்லாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் நடப்பு ரஞ்சி டிராபி தொடரில்…

Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!

ஓமவல்லிப் பச்சடி கற்பூரவல்லிதேவையானவை: ஓமவல்லி (அல்லது) கற்பூரவல்லி இலை – கைப்பிடி அளவு, இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 1, மிளகு – 5, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தேங்காய் – அரை டீஸ்பூன், தயிர் – தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்.செய்முறை: கடாயில் ஒரு துளி எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து, பருப்பின் வாசனை போனதும், கழுவிய…

1 183 184 185 186 187 216