IND Vs ENG: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பிரம்மாஸ்திரம் வெற்றியை கொடுக்குமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்புனேயில் இன்று (ஜன. 31) நடைபெறவுள்ள 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முடிவுடன் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீ்ச்சு ஆதிக்கம் செய்கிறதா அல்லது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ராஜ்ஜியம் நடத்துகிறதா என்பது ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடியாக செல்கிறது. ரன் விருந்து எதிர்பார்ப்புஇந்தியா-இங்கிலாந்து டி20 தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு ரன் விருந்தாக அமையும், வானவேடிக்கை நிகழ்த்தும் போட்டியாக இருக்கும் என…