துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்றார் குர்பிரீத் சிங்
கெய்ரோ: உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் 584 -18x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உக்ரைனின்பாவ்லோ கொரோஸ்டிலோவ் 584 – 29x புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். பிரான்ஸின் யான் பியர்லூயிஸ் ஃப்ரிட்ரிசி 583 –-18x புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப்…









