Monthly Archives: October, 2025

5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி: குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி | Mohammed Shami takes 5 wickets as Bengal beat Gujarat by 141 runs

கொல்கத்தா: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான குரூப் சுற்று ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் பெங்கால் அணியின் ஷமி. இதன் மூலம் 141 ரன்களில் வெற்றி பெற்றது பெங்கால் அணி. நடப்பு ரஞ்சி டிராபி சீசன் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. கடந்த 25-ம் தேதி பெங்கால் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.…

குகேஷைப் போல கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஏன் கோடிகளில் பரிசுத்தொகை வழங்கவில்லை? – அரசு வட்டாரங்கள் சொல்வதென்ன? |Why No Crore Reward for Kannagi Nagar’s Karthika Like Gukesh? – Government Sources Explain

இதில் இன்னொரு தரப்பு கருத்து இருப்பதையும் அறிய முடிகிறது. தமிழக அரசு வயதின் அடிப்படையிலும், போட்டியின் தன்மையின் அடிப்படையிலும் இந்தத் தொடர்களில் வெல்வோருக்கு இவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கொள்கை முடிவே வைத்திருக்கிறது. அதன்படி ஆசிய அளவில் தங்கம் வெல்லும் இளையோருக்கு 15 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கார்த்திகாவுக்கு அதைவிட அதிகமாக 10 லட்ச ரூபாயைச் சேர்த்து 25 லட்ச ரூபாயை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. கார்த்திகாவின் வெற்றிக்கு ஏற்ற நியாயமான ஊக்கத்தொகையே வழங்கப்பட்டிருக்கிறது எனச்…

Shreyas Iyer: 'ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருக்கிறார்' – சூர்யகுமார் யாதவ் அப்டேட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பலத்த காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஸ்ரேயஸ் ஐயருக்கு அடிபட்டது. இந்தக் காயத்தால், ஸ்ரேயஸ் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பிசிசிஐ மருத்துவர்கள் உட்பட பலரும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயரின் காயம் குறித்து…

பாகிஸ்தானுக்கு செமிகண்டக்டர் துறையை மேம்படுத்த சௌதி அரேபியாவின் உதவி தேவைப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு நம்பத்தகுந்த கூட்டாளியாக இருக்கவேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறதுகட்டுரை தகவல்பாகிஸ்தானின் செமிகண்டக்டர் துறையை முன்னேற்ற நீண்ட கால திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் கட்டமாக 7200 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ஷாஜா ஃபாதிமா கவாஜா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வேலை செய்யக்கூடிய, இன்டக்ரேடட் சர்க்கியூட் (IC) வடிவமைப்பும் ஆராய்ச்சியும் செய்யத் தெரிந்தவர்களை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் இலக்கு என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.மூன்று கட்டத்…

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நாள் ஆட்டங்கள் ரத்து | chennai open tennis day one game suspended due to rain

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி டென்​னிஸ் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக மழை பெய்​த​தால் மைதானத்​தில் உள்ள அனைத்து ஆடு​களங்​களி​லும் தண்​ணீர் தேங்​கியது. இதன் காரண​மாக முதல் நாளில் நடை​பெற இருந்த அனைத்து ஆட்​டங்​களும் ஒத்​திவைக்​கப்​பட்​டன. 2-வது நாளான இன்று ஒற்​றையர் பிரி​வில் முதல் சுற்று ஆட்​டங்​கள் அனைத்​தும் நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன்​படி இன்று 16 ஆட்​டங்கள் நடை​பெறுகின்​றன. பகல் 12 மணிக்கு…

Shakthi Thirumagan: சக்தித் திருமகன் படத்தில் நிறைய விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டிருக்கின்றன; ஷங்கர் பாராட்டு | So many issues were addressed in the film ‘Shakthi Thirumagan’; Director Shankar praises it

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனியின் நடிப்பில் அவரின் 25-வது படமாக `சக்தித் திருமகன்” கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.`அருவி’, `வாழ்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.சக்தித் திருமகன் – Shakthi Thirumaganவிமர்சன ரீதியாகவும் பார்வையாளர்களிடத்தில் இப்படத்துக்கு நல்ல ரீச் கிடைத்தது.இவ்வாறிருக்க அக்டோபர் 24-ம் தேதி ஜியோ…

Shafali Verma: காயத்தால் வெளியேறிய பிரதிகா ராவல்; மாற்று வீராங்கனையாகச் சேர்க்கப்பட்ட ஷபாலி வர்மா | Shafali Verma added india squad by replacement of injured Pratika Rawal in Womens World Cup 2025

இதுகுறித்து ஐ.சி.சி தனது இணையதளப் பக்கத்தில், “கணுக்கால் காயம் காரணமாக இந்தியாவின் ஓப்பனிங் வீராங்கனை பிரதிகா ராவல் நடப்பு ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.அக்டோபர் 30-ம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவருக்குப் பதிலாக ஷபாலி வர்மாவை இந்தியா அறிவித்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.Shafali Verma – ஷபாலி வர்மாகடைசியாக 2022 ஜூலையில் இலங்கைக்கெதிரான ஒருநாள் போட்டியில் அரைசதமடித்த ஷபாலி வர்மா, மோசமான ஃபார்ம் காரணமாகக் கடந்த ஆண்டு அக்டோபரில் நியூசிலாந்துக்கெதிரான…

டிரம்பின் ஆசிய பயணத்தின் மீதான எதிர்பார்ப்புகள் – யாருக்கு வெற்றி கிடைக்கும்?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, கோலா லம்பூர் வந்தடைந்த டிரம்ப்27 அக்டோபர் 2025அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பை உள்ளடக்கிய ஓர் முக்கியமான அரசியல் பயணத்துக்காக ஆசியாவுக்கு வருகை தந்துள்ளார்.உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக வர்த்தகம் உள்ளது.டிரம்ப் முதலில் மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம்…

பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட்: எம்பாப்பே, பெல்லிங்கம் அசத்தல் | la liga 2025 26 real madrid beats barcelona in el clasico

மாட்ரிட்: நடப்பு ‘லா லிகா’ சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் மாட்ரிட் அணி. இதில் ரியல் மாட்ரிட் அணிக்கான வெற்றி கோலை ஜூட் பெல்லிங்கம் பதிவு செய்தார். ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா பலப்பரீட்சை மேற்கொண்டன. கடந்த சீசனில் நான்கு முறை இந்த இரண்டு அணிகளும் விளையாடின. நான்கிலும் பார்சிலோனா…

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்; தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு | We will prevent disenfranchisement; Stalin opposes Election Commission’s SIR move

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது.தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் குற்றம்சாட்டி எதிர்த்தது.இவ்வாறிருக்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும் என்று தேர்தல்…

1 2 3 4 5 6 31