காஸா போர் நிறுத்தம்: இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா? | Not only Trump these countries also played an important role in ending the war in Gaza
2. பிரான்ஸ்:ஐரோப்பாவில் பிரான்ஸின் பேச்சுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் வைக்கும் கருத்து அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் பிரான்ஸின் தலையீடு காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலை பிரான்ஸ் கண்டித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், பிரான்ஸைச் சேர்ந்தவர்களும் அந்தத் தாக்குதலில் உயிரிழந்திருந்தனர். முதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்திய அட்டூழியங்கள் ஏற்புடையதல்ல…









