ஒரே ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 2 லட்சமாக உயருமா? குறைய வாய்ப்புண்டா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியர்கள் பலர் தற்போது புதிய தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்கிறார்கள்.கட்டுரை தகவல்நவராத்திரி பண்டிகைகள் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளன.முன்னதாக, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1.16 லட்சத்தை எட்டியிருந்த நிலையில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1.35 லட்சத்தை எட்டியிருந்தது. ஒரே நாளில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.3,500 அதிகரித்துள்ளது.கடந்த நவராத்திரியில், 10 கிராமுக்கு ரூ.78,200 என்று வர்த்தகமான தங்கத்தின்…









