பிரான்ஸ் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின்: யமால் அசத்தல்! | uefa nations league spain beats france in semi finals yamal scores 2 goals
ஸ்சுட்கார்ட்: நடப்பு யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கால்பந்து அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின் அணி. அந்த அணியின் இளம் வீரர் யமால், 2 கோல்களை பதிவு செய்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் 4 கோல்களை 59 நிமிடங்களுக்குள் ஸ்பெயின் பதிவு செய்துவிட்டது. அதுவரை பிரான்ஸ் அணி ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. 59-வது நிமிடத்தில்…