Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்…' – பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!
ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.Virat Kohliஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரு அணியின் முகமான நட்சத்திர வீரர் விராட் கோலி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.முன்னதாக பெங்களூரு அணி ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில், ‘நம்முடைய அணியை வரவேற்க கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலையும் இழப்புகளையும்…