Monthly Archives: June, 2025

Ooty – minister Raja kannappan; “அமைச்சருக்கு இது அழகல்ல” – ராஜ கண்ணப்பனுக்கு எதிராகப் போராட்டம்; அரசியல் கட்சிகள் எச்சரிப்பது என்ன?

பிண்ணனி குறித்து தெரிவித்த அரசியல் கட்சியினர், “வால்பாறையில் சிறுமியை சிறுத்தைத் தாக்கிக் கொன்ற துயரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், “மனிதர்களை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்குவது வழக்கமான ஒன்றுதான். அதற்காகத்தான் இழப்பீடு தொகை வழங்குகிறோம்’ எனக் கொஞ்சமும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார். அமைச்சர் பதவிக்கு இது கொஞ்சமும் அழகல்ல. அமைச்சருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.நாளுக்கு நாள் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகரித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில்…

வருகிறார் அடுத்த ரிஷப் பண்ட்! – யார் இந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா? | The next Rishabh Pant is coming! Who is this Harvansh Singh Pangalia

இந்தியா யு-19 வீரர், சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்வன்ஷ் சிங் பங்காலியா அடுத்த ரிஷப் பண்ட் என்று பேசப்பட்டு வருகிறார். இவரும் விக்கெட் கீப்பர்/பேட்டர்தான் ஆனால், இவர் இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் 52 பந்துகளில் 103 ரன்களை விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஹர்வன்ஷ் இறங்கும் போது இந்தியா யு-19 அணி 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்வன்ஷ் சிங்குடன் அப்போது ஆர்.எஸ்.அம்பிரீஷ் என்ற இளம் வீரர் கிரீசில் இருந்தார்,…

இந்தோனீசிய எரிமலையில் விழுந்த பெண் – உயிருடன் இருப்பது தெரிந்தும் காப்பாற்ற முடியாதது ஏன்?

பட மூலாதாரம், Family handoutபடக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ்.கட்டுரை தகவல்இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய…

Ronaldo: “அதே ஆர்வம், அதே கனவு” – அல் நஸர் அணியில் மீண்டும் இணைந்த ரொனால்டோ

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டுதான் தொடங்கினார். ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இணைந்த பின்னே அவரின் திறமைகள் உலகுக்குத் தெரியவந்தன. 2003-2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியிலிருந்த ரொனால்டோ 2009-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.கிறிஸ்டியானோ ரொனால்டோ சுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்கியது.…

“நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்” – அமித்ஷாவிற்கு கனிமொழி பதில்

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஆங்கிலத்தில் பேசுபவர்கள் எதிர்காலத்தில் வெட்கப்படுவார்கள்’ என்று பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், இன்று அமித்ஷா ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், ‘இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்காது. இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்’ என்று பேசியிருக்கிறார். இதை குறிப்பிட்டு, திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம்.…

மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து: தஞ்சாவூர், காஞ்சிபுரம் அணிகள் கோல் மழை | State Junior Mens Football Thanjavur Kanchipuram teams won

சாத்தூர்: தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் ஆதரவுடன் விருதுநகர் மாவட்ட கால்பந்து சங்கம் நடத்தும் டி.பி.ராமசாமி பிள்ளை கோப்பைக்கான மாநில ஜூனியர் ஆடவர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சாத்தூரில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை 8-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணியை வீழ்த்தியது. மதுரை அணி தரப்பில் பரத் 3 கோல்களையும் வில்லியம்ஸ், சுஜில் தேவா ஆகியோர் தலா 2 கோல்களையும் சஞ்ஜய் ஒரு கோலையும் அடித்தனர். தூத்துக்குடி அணி சார்பில்…

தபால் துறையின் புதிய டிஜிபின் என்றால் என்ன? புரட்சியை ஏற்படுத்தப் போகிறதா?

பட மூலாதாரம், X/India Postகட்டுரை தகவல்எழுதியவர், நீச்சல்காரன்பதவி, தகவல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்26 ஜூன் 2025, 09:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்அண்மையில் இந்திய தபால் துறை புதிதாக அஞ்சல் குறியீட்டிற்குப் பதில் டிஜிபின் (Digipin) என்ற குறியீடுகளை அறிமுகம் செய்துள்ளது. அதில் நாம் பதிவு செய்துகொண்டு அந்தக் குறியீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தான செய்திகளை நாம் கண்டிருப்போம்.இது உண்மையா? டிஜிபின்னுக்கு பின்னுள்ள தொழில்நுட்பம் என்ன? விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்.இந்தியாவில் பொதுவாக இருப்பிட…

ரிஷப் பண்ட்: “20 முறை அவுட்டாகப் பார்த்தார்” – துணிச்சலான பேட்டிங் ஸ்டைல் குறித்து ஏபிடி ஓபன்!

நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன்னைச் சிறந்த பேட்ஸ்மேனாக நிலை நிறுத்தியுள்ளார் இந்தியாவின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டி போல அதிரடியாக விளையாடும் பண்டின் பேட்டிங் ஸ்டைல் கிரிக்கெட் வட்டாரத்தில் எப்போதும் பேச்சுபொருளாக இருக்கும்.இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ். மைதானத்தில் பிரிட்டிஷ் ரசிகர்களையும் கூட உற்சாகப்படுத்தும் பண்டின் அச்சமற்ற அணுகுமுறைதான் அவரது வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதையும் ஏபிடி…

விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! – மருத்துவர்கள் பரிசோதனை | Villupuram: Lizard’s tail in Chief Minister’s breakfast program!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 67…

‘நீ ஒன்றும் கர்ட்லீ ஆம்புரோஸ் அல்ல’ என சீண்டிய இயன் ஹீலி: வெகுண்டெழுந்த ஷமார் ஜோசப் | You are not Curtly Ambrose: Ian Healy sledges West Indies; Shamar Joseph responds

பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180 ரன்களுக்குச் சுருண்டது. ஷமார் ஜோசப் 4 விக்கேட்டுகலையும் ஜேய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது. 180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது, ஆஸ்திரேலியாவின் 30 ஆண்டுகளில் எடுத்த ஆகக்…

1 2 3 4 5 6 30