இரானில் இப்போது என்ன நிலவரம்? அயதுல்லா அலி காமனெயி ஆட்சி சிக்கலில் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இஸ்ரேலுடனான மோதலின்போது, இரானில் உள்ள ஒரு ரகசிய பதுங்கு குழியில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த பிறகு, 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி, இப்போது ஏற்பட்ட சண்டை நிறுத்தத்தைப் பயன்படுத்தி வெளியே வர விரும்பலாம்.இஸ்ரேலால் அவர் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்றும், யாருடனும் தொடர்பு கொள்ளாமல் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அரசின் உயர் அதிகாரிகளுக்கே அவரை அணுக முடியாத நிலை…