அதிமுகவிற்கு பாஜக சுமையா? – சீமான் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ”மனதின் குரல்” நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். பின்னர், செய்தியாளர்ளிடம் பேசிய அவர், ”வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவிற்கு பா.ஜ.க கூடுதல் சுமையாக இருக்கும் என சீமான் கூறியுள்ளார். சுமை இல்லாத கட்சி எது என்று அதையும் அவரே விளக்கமாக கூறி இருக்கவேண்டும். யார் சுமை, யார் சுமை இல்லை…