கடைசி பந்தில் ரன்னில் அவுட்… தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்
மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் பெங்களூரு அணியும், உத்தரப்பிரதேச அணியும் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி 56 பந்துகளில் 90 ரன்களும், டேனி வியாட்-ஹாட்ஜ்…









