‘ஸ்டுபிட் ஷாட்’ – ரிஷப் பண்ட் அவுட் ஆன விதம் குறித்து கவாஸ்கர் கடும் சாடல் | Stupid shot – Gavaskar slams Rishabh Pant
மெல்பர்ன்: பிட்சில் ஒன்றுமே இல்லை என்பதை ஜெய்ஸ்வால், கோலி சதக் கூட்டணி நிரூபித்தும், நின்று ஆடும் பொறுமையும் விவேகமும் இல்லாமல் ரிஷப் பண்ட் மிக அசிங்கமான ஷாட் ஒன்றை ஆடி டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். இது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. ரிஷப் பண்ட் 28 ரன்களுக்கு சிரமம் இல்லாமல்தான் ஆடிவந்தார். சரி, அரைசதம் எடுத்த பிறகு பேட்டிங் பிட்சான இதில் நிச்சயம் ஒரு பெரிய சதத்தை எடுப்பார் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையில், ஆஸ்திரேலிய அணி விக்கெட் எங்கிருந்து…