IND vs AUS முதல் டெஸ்ட் | திருப்பிக் கொடுத்த இந்திய அணி: ஆஸ்திரேலியா 67/7 | Australia scores 67 runs against india in first test match
பெர்த்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 67 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி இந்தியாவை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.…









