இந்தியாவில் விளையாடும் மெஸ்ஸி: அர்ஜெண்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகை! | Argentina team to visit Kerala next year Messi playing in India
திருவனந்தபுரம்: அடுத்த ஆண்டு அர்ஜெண்டினா கால்பந்து அணி கேரளாவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறது என்றும், இதில் நட்சத்திர வீரர் மெஸ்ஸியும் பங்கேற்பார் என்றும் கேரள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தப் போட்டியை மாநில அரசு பொறுப்பேற்று நடத்தும் என அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “உலகின் நம்பர் 1 கால்பந்தாட்ட அணியான அர்ஜெண்டினா, கேரளாவில் விளையாட உள்ளது. இதில் மெஸ்ஸியும் விளையாட உள்ளார். இந்த…









