Monthly Archives: November, 2024

ஈரோடு: மாநில அளவிலான ஓட்டப்பந்தயம்; தங்கம் வென்று அசத்திய சகாய ஜெமிமா!

தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான ஓட்டப்பந்தய போட்டியில் தூத்துக்குடி மாவட்டம், T.சவேரியார்புரத்தை சேர்ந்த சகாய ஜெமிமா என்ற பத்தாம் வகுப்பு மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.ஜெமிமாவின் வெற்றி குறித்து பள்ளி முதல்வர் மரிய செல்வராணி கூறுகையில், “மாணவியின் முழுமனதான ஈடுபாடு, தொடர் பயிற்சி மற்றும் உழைப்புதான் மாணவியின் வெற்றிக்கான காரணம். பள்ளிக்கென தனியாக விளையாட்டு பயிற்சியாளர் இல்லாத நிலையிலும் மாணவ-மாணவியரின் ஈடுபாடு மற்றும் திறமைகளை கருத்தில்…

அரசமைப்புச் சட்டம் 75 ஆவது ஆண்டில் 75 நூல்கள்; மணற்கேணி பதிப்பகம் முன்னெடுக்கும் மாபெரும் திட்டம்!

அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டு இது. நவம்பர் 26 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மாண்பமை குடியரசுத் தலைவர் உரையாற்றவிருக்கிறார். இந்த ஆண்டைப் பல்வேறு விதங்களில் கொண்டாட இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன.‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தைப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இன்று முன்வைத்து வருகின்றன. அது அரசியல் முழக்கமாக மட்டுமின்றி சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதாக மாறவேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டால்தான் அது நடக்கும். எனவே,…

ஆஸ்திரேலியாவை முடக்கிய ரஹானே-ரவி சாஸ்திரி ‘டெக்னிக்’: இந்த முறை சாத்தியமா? | Rahane Ravi Shastri s technique which beats Australia is it possible in current bgt

கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பயணம் செய்த போது விராட் கோலி முதல் டெஸ்ட் அடிலெய்ட் பகலிரவு போட்டியில் 36 ரன்களில் ஆல் அவுட்டுக்குப் பிறகே விடுப்பில் சென்று விட கடினமான சூழ்நிலையில் அஜிங்க்ய ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது கேப்டன்சி ஆஸ்திரேலிய அணியினரையே பிரமிக்க வைத்தது. 1932-33 ஆண்டுகளில் டான் பிராட்மேன் என்னும் ஒரு மிகப்பெரிய ஆளுமை கிரிக்கெட் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவரையும் அவரது படையான ஆஸ்திரேலிய அணியையும்…

மணிப்பூர்: மீண்டும் கலவரம்- அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் குறி வைக்கப்படுகிறார்களா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இம்பாலில் நடந்த சமீபத்திய கலவரத்தில், எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் வாகனங்களைக் மக்கள் குறி வைத்தனர்கட்டுரை தகவல்இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சனிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில், இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சில எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் எரியூட்டப்பட்டன.”இம்பாலில், கோபமடைந்த சில போராட்டக்காரர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ உட்பட சில மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் உடமைகள் மீது குறிவைத்து தாக்குதல்…

Sarfaraz Khan: 'முதலில் அவரைத் தோற்க விடுங்கள்..!' – சர்பராஸ் கானுக்கு கங்குலி ஆதரவுக் குரல்

சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்காமலேயே அவரைப் பற்றித் தீர்மானிக்காதீர்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.சர்பராஸ் கான், கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி உள்ளிட்ட முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாகத் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில், 54 ஆட்டங்களில் 16 சதமடித்து 4,500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கும் சர்பராஸ் கான், கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் இங்கிலாந்துக்கு…

தேனியில் கைவரிசை காட்டிய கொத்தனார் மூர்த்தி டீம்; 88 பவுனை மீட்ட காவல்துறை; சிக்கியது எப்படி?

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் 9 வீடுகளில் அடுத்தடுத்து தொடர் திருட்டுகள் நடந்தன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில் கோவை, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்த வழக்குகளில் பெரியகுளத்தைச் சேர்ந்த 2 பேர் கொண்ட கும்பலை விருதுநகர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கும்பலைக் கோவை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து சிறையில் அனுப்பியிருந்தனர்.கைதான மூர்த்திஇந்நிலையில் தேனி பழனிசெட்டிபட்டி பகுதிகளில் நடந்த தொடர் திருட்டு வழக்குகளில் இவர்களுக்குத்…

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி! | Australia won the t20 series against Pakistan

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஹோபர்ட் நகரில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாபர் அஸம் 41, ஹசீபுல்லா கான் 24, ஷாகீன் ஷா அப்ரிடி 16 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களில்…

செளதி அரேபியா: இதுவரை இல்லாத அளவுக்கு மரண தண்டனை – இந்தியர்கள் எத்தனை பேர்?

பட மூலாதாரம், Anadolu Agency/Getty Imagesபடக்குறிப்பு, மூன்று இஸ்லாமிய அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிராக நியூயார்க்கில் உள்ள சௌதி தூதரகத்திற்கு முன் மக்கள் 2019 ஆண்டு நடந்த ஆர்பாட்டம்33 நிமிடங்களுக்கு முன்னர்சௌதி அரேபியா 100-க்கு மேற்பட்ட வெளி நாட்டினருக்கு இந்த வருடம் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஏ.எஃப்.பி (AFP ) செய்தி முகமையின் செய்தியில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏமனைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.சௌதி அரேபியாவில் அதிகரித்து…

"டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலிக்கு பிறகு சிறந்த பேட்ஸ்மேன் இவர்தான்!"- கங்குலி சொல்லும் வீரர் யார்?

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருகிற 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோலி இந்தத் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று கங்குலி பேசியிருக்கிறார்.கோலி குறித்து பேசிய கங்குலி, ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கோலி நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். 2014ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் 4 சதங்களை கோலி அடித்திருந்தார். 2018-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சதம் அடித்து சிறப்பாக செயல்பட்டிருந்தார். தற்போதும், கோலியால்…

RSS கோட்டையில் ரோடு ஷோ: கறுப்புக்கொடி காட்டிய பாஜக-வினருக்கு பிரியங்கா காந்தி பதிலடி

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள்கள் தீவிரமாக பிரசாரம் செய்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூரில் ரோடு ஷோ நடத்தினார். மக்கள் கூட்டத்தில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ வாகனம் வந்தபோது சாலையோரத்தின் இரண்டு பக்கமும், கட்டடத்தின் மேலே நின்றவர்களையும் பார்த்து கையை அசைத்தபடி சென்றார். ரோடு ஷோடு முடியும் இடத்தில் வந்தபோது, சாலையோரம் இருந்த கட்டடம் ஒன்றின் மாடியில் இருந்து சிலர் கறுப்புக்கொடி காட்டி பா.ஜ.கவிற்கு ஆதராக…

1 10 11 12 13 14 30