Doctor Vikatan: இன்சுலின் போட ஆரம்பித்தால், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டுமா?|Doctor explanation regarding Injecting Insulin is a life long continuous process or not?
மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற நோயாளிகளுக்கும் இன்சுலின் தான் போடுவோம். மாத்திரைகள் தர மாட்டோம்.சிலருக்கு எந்த மாத்திரையிலும் சர்க்கரையின் அளவு கட்டுப்படாது. அவர்களுக்கு வேறு வழியின்றி இன்சுலின் போடச் சொல்வோம். உடலில் இன்சுலின் சுரப்பு 90 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்துவிட்ட நிலையிலும் இன்சுலின் ஊசி போடச் சொல்வோம். இப்படி எந்தக் காரணத்துக்காக இன்சுலின் போடச் சொல்கிறார்கள் என்பது முக்கியம். கை, கால்களில் புண் ஏற்பட்டதால் இன்சுலின் போடச் சொல்லியிருந்தால், புண் சரியான பிறகு இன்சுலினை நிறுத்தி விடலாம்.உணவுப்பழக்க…








