Yearly Archives: 2023

ராணுவ  தினம்: 1949, ஜன.15-ம் தேதி இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியமான நாள் – ஏன்?

இந்திய ராணுவ தினம் முதன் முறையாக தலைநகருக்கு வெளியே பெங்களூருவில் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுவது ஏன்? அந்த கொண்டாட்டம் தொடங்கியது எப்படி? Source link

முதல்வருக்கு ஜவாஹிருல்லா நன்றி – Dinakaran

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்துக்கு பதிலுரைத்துப் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடக்கத்திலேயே என்னுடைய கோரிக்கையை மேற்கோள் காட்டி, பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை பத்து கோடியாக உயர்த்தி தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பிற்காக மனிதநேய மக்கள் கட்சி சார்பாகவும், தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாகவும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Source link

IND vs SL | கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மோதல் – தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி | Clash today in the last ODI cricket match – Indian team aiming to win the series completely

திருவனந்தபுரம்: இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றுவதில் இந்திய அணி தீவிர முனைப்புடன் செயல்படக்கூடும். இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள்கிரிக்கெட் போட்டித் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற முதல்ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி…

இளமையான தோற்றத்திற்கு உதவும் காளான்கள்.. முழு விவரம் இதோ..!

இந்த காளான்களில் உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச் சத்துக்கள் மிக அதிக அளவில் நிறைந்துள்ளன. மேலும் பொட்டாசியம் மிகவும் நிறைந்து காணப்படுவதால் தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது. நன்றி

சிம் கார்டு வாங்குவதில் வாக்குவாதம்! நடிகையை கடைக்குள் வைத்து லாக் செய்த ஊழியர்கள்.!

அன்னா ராஜன்மலையாளத்தில் எதிர்பார்ப்பின்றி வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் அங்கமாலி டைரிஸ். லிஜோ ஜோஸ் இயக்கிய இந்த திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் லிச்சியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்த உருவாக்கிக் கொண்டவர் அன்னா ராஜன். அதன்பின்னர் இவர் ஐயப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் சோஷியல் மீடியாவிலும் தற்போது செம ஆக்டீவாக இருக்கும் அன்னாராஜன் தற்போது தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது போலீசாரிடத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆலுவா காவல்நிலையத்தில் அளித்துள்ள…

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரத்தையடுத்த குண்டுகுளம் என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலர் முன்னிலையில் 5 கொடியவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயலாகும். கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் அடையாளம் மாணவிக்கு தெரியவில்லை என்றாலும், குற்றவாளிகள் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட பெயரை அடிப்படையாக வைத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் பகுதிகளில்…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் சாமி தரிசனம்…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் கோயிலில் வழிபட்டனர். பாரம்பரியமிக்க வெள்ளை வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து வீரர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. முன்னதாக இதே கோயிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கே.எல். ராகுல் சாமி தரிசனம் செய்தார்.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,729,564 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,729,564 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 671,121,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 642,173,323642,173,323 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,874 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

 ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக தலைமை ஆதரவு: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம் ஆகும். இதை செயல்படுத்தும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை இந்திய சட்ட குழு பரிசீலனை செய்து வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினால் செலவுகளை ஒன்றிய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும்…

லண்டன் | தீவிர சிகிச்சை பிரிவில் லலித் மோடி அனுமதி | Ex-IPL chief Lalit Modi on oxygen support at London

லண்டன்: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை…

1 388 389 390 391 392 419