`சாலையில் சுருண்டு விழுந்த பள்ளிச் சிறுமி…’ மாரடைப்பால் உயிரிழந்த சோகம்! | 13-year-old girl in Karnataka dies of heart attack
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பள்ளிக்கு நடந்து சென்ற 13 வயது சிறுமி டிசம்பர் 20 புதன்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கர்நாடகா முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தில் வசிக்கும் 13 வயது ஸ்ருஸ்தி என்ற சிறுமி, தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கிச் சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். உடனே சிறுமியை முடிகெரே நகரில் உள்ள அரசு எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.மருத்துவர்கள்சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள்…