Yearly Archives: 2023

Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போனால், காது கேட்காமல் போக வாய்ப்பு உண்டா? | Doctor Vikatan: If an insect enters the ear, is there a chance of hearing loss?

Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போய்விட்டால் ஆபத்தா… அதனால் காது கேட்காமல்போக வாய்ப்பு உண்டா… அந்தப் பூச்சியை எப்படி வெளியேற்றுவது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை காதுக்குள் பூச்சிகள் செல்வதால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. காது கேட்காமல் போவதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவு.  எறும்பு, சின்ன வண்டு போன்ற பூச்சிகள் காதுக்குள் சென்று காது ஜவ்வு அல்லது சருமப் பகுதியைக்  கடிப்பதால்…

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா – சீனா ஆகஸ்ட் 3-ல் மோதல்; பாகிஸ்தானுடன் 9-ம் தேதி பலப்பரீட்சை | Asian Champions Trophy Hockey India vs China clash August 3 with Pakistan on 9

சென்னை: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி சீனாவுடன் மோதுகிறது. அதேவேளையில் பாகிஸ்தானுடன் 9-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் போட்டியை…

மாஞ்சோலை: `3 இட்லிகளுக்காக நடந்த போராட்டம்!'; அறிந்திடாத கதைகள்|1349/2 எனும் நான்|பகுதி-15

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பருகும் பானம் தேநீர். ஆனால் செடியிலிருந்து பறித்த தேயிலையை அப்படியே வெந்நீரில் போட்டு காய்ச்சி அருந்தினால் அதன் சுவையை முழுமையாக உணரமுடியாது. பதப்படுத்துதல் உள்ளிட்ட பல கட்டங்களைத் தாண்டிய பின்னர்தான் அவை தேயிலைத்தூளாக மாறும்.தேயிலை கொழுந்துதரமான தூள் கிடைக்க தேயிலை பறிக்கும் இடத்திலேயே தொழிற்சாலை இருப்பது அவசியம். அதனால் 1936ல் மாஞ்சோலையிலும், 1952ல் நாலுமுக்கிலும் தேயிலைத் தொழிற்சாலைகளை கம்பெனி உருவாக்கியது. முழுக்க ஆர்கானிக் முறையில் தேயிலை உற்பத்திசெய்ய வேண்டி ஊத்து எஸ்டேட்டில் 1988ஆம்…

சிக்கந்தர் ராசா அதிரடி சதம்… நெதர்லாந்தை வென்றது ஜிம்பாப்வே அணி

உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வென்றுள்ளது. ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா அதிரடியாக சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதவுள்ள இந்த தொடரில்  8 அணிகள் நேரடியாக தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி பெற்றுள்ள…

உடலில் இருக்கும் மொத்த கழிவுகளையும் வெளியேற்ற உதவும் லெமன்கிராஸ் டீ.. எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா.?

இன்றளவில் பல்வேறு விதமான பொருட்களைக் கொண்டு செய்யப்படும் வெவ்வேறு விதமான சுவைகளை உடைய தேநீர்கள் கிடைக்கின்றன. அதிலும் ஹெர்பல் டீ வகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வரிசையில் லெமன் கிராஸ் டீ ஒரு அற்புதமான மூலிகை பானம் ஆகும். லெமன் கிராஸ் தண்டு மற்றும் இலைகளைக் கொண்டு காய்ச்சப்படும் இந்த டீயை தற்போது பலர் விரும்பி பருகி வருகின்றனர். லெமன் கிராஸ் டீ குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.செரிமானத்திற்கு லெமன்…

டைட்டானிக் கப்பலை தேடி சுற்றுலா பயணம் – எப்போது, யாரால் தொடங்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images7 மணி நேரங்களுக்கு முன்னர்அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய ’டைட்டானிக் கப்பலை’ காண்பதற்காக, ஆழ்கடலில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகள் காணாமல் போயிருக்கும் சம்பவம் உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேருடன் கிளம்பிய ’டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், ஜூன் 19ஆம் தேதி ஆழ்கடலுக்குள் காணாமல் போயிருக்கிறது.இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 110 ஆண்டுகளுக்கு…

ஒலிம்பிக்ஸ் தடம்; அர்ஜுனா விருது; ஆசிய அளவில் முதல் பதக்கம்; சாதிக்கும் தமிழர் பவானி தேவி!|Bhavani Devi becomes first Indian fencer to win medal in Asian Championships

பவானி தேவி படைத்த இந்த வரலாற்று சாதனைக்கு விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். “ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அரையிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று பதக்கம் வென்றது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நீங்கள் கூறியதுப்போல ” எல்லா முடிவுகளுக்கும் ஒரு தொடக்கம் இருக்கிறது”.#Tokyo2020 ஒலிம்பிக்ஸில் உங்களுடைய அளப்பரிய சாதனையும், அந்த தினத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியும், இந்தியாவின் மிகப்பெரிய கனவுகளை நனவாக்குவதற்கான படிக்கட்டுகள். சக விளையாட்டு வீரர்களுக்கும் நீங்கள் உத்வேகத்தை அளிக்கிறீர்கள். உங்களின் இந்தப்…

Doctor Vikatan – 01 June 2015 – எலும்புகளை காக்க 10 கட்டளைகள் | 10 Tips for Strong Bones

எலும்புகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில், சர்க்கரை நோய்க்கு முதல் இடம். சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டால், எலும்பு அடர்த்திக் குறைவு வராமல் தடுக்க முடியும்.எலும்பு தொடர்பான பிரச்னைக்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளை, அறிவுறுத்தும் காலம் வரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வலி குறைந்ததும் உடற்பயிற்சியை நிறுத்தினால், மீண்டும் பிரச்னைகள் தொடரத்தான் செய்யும்.மூட்டுகளை வலுவாக்கச் சிறந்த பயிற்சி நீச்சல்தான். தண்ணீருக்குள் இருக்கும்போது, நம் உடல் எடை ஆறில் ஒரு பங்காகக் குறைந்துவிடுகிறது. தண்ணீருக்குள் மூட்டுகளை நன்கு அசைக்கக்கூடிய…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய கால்பந்து அணி நிதியுதவி | Indian football team donates money to Odisha train accident victims families

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்திய கால்பந்து அணி சுமார் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று இந்திய அணி இன்டர்கான்டினென்டல் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இந்திய அணி இதனை தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.…

1 99 100 101 102 103 419