Sourav Ganguly: "ஐ.பி.எல் வெச்சு டெஸ்ட் டீம் செலக்ட் பண்ணாதீங்க!" – கங்குலி சொல்லும் லாஜிக்
ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பலரும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என்றும் புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.சவுரவ் கங்குலிஇதுகுறித்து பேசிய அவர், “ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிடக்கூடாது. இந்திய வீரர்களுக்கு எப்போதுமே திறமை இருக்கிறது. நான் விராட் கோலி, புஜாரா…





