Daily Archives: June 2, 2023

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: இந்த வெட்டுக்குத்துக் கெல்லாம் முட்டுச்சந்தே இல்லையா முத்தையா?|Kathar Basha Endra Muthuramalingam Movie digital Review

காதர்பாட்ஷாவாக நடித்துள்ள ஆர்யா,  சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும் கிராமத்து இளைஞராக, வேட்டி இடுப்பில் நிற்காத முத்தையாவின் கிராமத்து இளைஞராக  ந(அ)டித்துள்ளார். வெறித்தனமாக சண்டைக் காட்சிகளில் காட்டும் வீரியத்தை வசன உச்சரிப்பில் சிறிதேனும் காட்டியிருக்கலாம். கொஞ்சமே வரும் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் உணர்ச்சிகளைக்  கடத்துவதில் திணறுகிறார். தைரியமாக எதிரிகளை எதிர்கொள்வது, அண்ணன் மகள்களுக்காக உருகுவது என தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்றவகையில் நடித்திருக்கிறார் நாயகி சித்தி இத்னானி.விகடன் விமர்சனம்மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன்…

ஒவ்வொரு சிகரெட்டிலும் இனி புகையிலை எச்சரிக்கை வாசகம்; கனடாவின் புதிய முன்னெடுப்பு!|Each Canadian cigarette will soon carry a health warning

உலகில் முதல் முறையாக, சிகரெட்டுகளில் எச்சரிக்கை லேபிளை அச்சிட உள்ளதாக கனடா அரசின் சுகாதார அமைப்பு  அறிவித்துள்ளது. ஏற்கெனவே சிகரெட் பாக்கெட்டுகளின் அட்டையில் எச்சரிக்கை வாசகங்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு சிகரெட்டிலும் அதனை அச்சிட முடிவு செய்துள்ளது. புதிதாக அச்சடிக்கப்பட உள்ள சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும், `புகையிலை புற்றுநோயை உருவாக்கும்’, `உள்ளிழுக்கும், வெளியிடும் ஒவ்வொரு புகையிலும் விஷம் உள்ளது’ போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட உள்ளன. இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை, ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.…

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ஹூப்பர் நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணையின் துணை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆகிய 2 தொடர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் கார்ல் சூப்பர் நியமனத்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 329 சர்வதேச போட்டிகளில் கார்ல் ஹூப்பர் விளையாடி உள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய அணியில் இடம் பெற்றிருந்த…

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுதானியங்கள்.. இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Nellai News | சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து திருநெல்வேலியை சேர்ந்த பழனி ராஜன் கூறும் கருத்துக்களை பார்க்கலாம். நன்றி

கிருஷ்ணர் ஆட்சி செய்த ‘துவாரகை’ உண்மையில் இருந்ததா? – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்

கட்டுரை தகவல்“துவாரகை நகரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் நடந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரே இடமாக அது உள்ளது,” என்கிறார் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கூடுதல் தலைமை இயக்குநரான முனைவர்.அலோக் திரிபாதி.“நான் ஒரு நீரடி தொல்லியல் ஆராய்ச்சியாளர். இந்திய நீர்நிலைகளில் மூழ்கிப்போன தொன்மையான இடங்களின் தேடலில் நான் ஈடுபட்டுள்ளேன்,” என்று கூறும் டாக்டர் அலோக் திரிபாதி, “நீருக்கு அடியில் ஆய்வு மேற்கொள்ளும் தொல்லியல் ஆய்வுப் பிரிவால் ஒரு மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி துவாரகையில் மேற்கொள்ளப்பட்டது.…

ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத உணவுப் பொருள்கள்…. எவை, ஏன்? | #VisualStory

Fridge நம்மில் பலரும் வீட்டில் ஃபிரிட்ஜுக்குள் பால், காய்கறி, பழம், உணவு என எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொருள்களை வைத்துவிடவே நினைப்போம். முட்டைஃபிரிட்ஜுக்குள் எந்தப் பொருள்களை வைக்கலாம், எவற்றை வைக்கக் கூடாது, எவ்வளவு நாள் வைக்கலாம் என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். cooking சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடேற்றிச் சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. மீண்டும் சூடேற்றப்படும்போது சில உணவுகள் சத்துகளை இழப்பதுடன், நேரங்களில் ஆபத்தானதாகவும் ஆகிவிடலாம். பூண்டுபூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, தேன்…

Lionel Messi: PSG கிளப்பிலிருந்து விலகிய மெஸ்ஸி; பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த புதிய கிளப்! |Lionel Messi to leave PSG club

இதனை தற்போது பிஎஸ்ஜி கிளப்பின் பயிற்சியாளர் கிறிஸ்டோப் கால்டியர் உறுதி செய்திருக்கிறார். பிரான்ஸில் நாளை (சனிக்கிழமை)  நடைபெறும் Ligue 1 ஆட்டத்தில் கிளர்மான்ட்  அணியுடன் பிஎஸ்ஜி அணி நாளை மோதவிருக்கிறது. இதுவே மெஸ்ஸி, பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி ஆட்டமாகும்.  2021 முதல் 2023 ஜூன் வரை மெஸ்ஸியை பிஎஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது  ஒப்பந்தம் முடிவது மட்டுமின்றி சமீபத்தில் சவூதி அரேபியாவுக்கு அணியின் அனுமதியின்றி மெஸ்ஸி சென்றதால் அணி அவரை இடைநீக்கம் செய்திருந்தது. இதுபோன்ற கருத்து வேறுபாடுகளினாலும் மெஸ்ஸி…

பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் `தமிழ்ப்பற்று’ அரசியலுக்குப் பின்னால்..?! | Prime Minister Modi, Rahul Gandhi’s ‘Tamil politics’

`தமிழ்மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டேன்!’ – ராகுல் காந்தி:தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு செங்கோலையும் கையில் எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி ஸ்கோர் செய்த நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தியும் தன் பங்குக்கு தமிழ்மொழி மீதான பற்றை நாடு கடந்து பொழிந்திருக்கிறார். பத்து நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல்…

Doctor Vikatan: பல வருடமாகத் தொடரும் இன்ஹேலர் உபயோகம்… அடிக்ஷனாக மாற வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 70 வயதாகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உள்ளவர் என்பதால் இன்ஹேலர் உபயோகிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. இன்ஹேலர் உபயோகிப்பது அடிக்ஷனாக மாறிவிடாதா… சில நேரங்களில் இன்ஹேலர் உபயோகித்தாலும் அவருக்கு உடனடியாக வீஸிங் சரியாவதில்லை. அப்படியானால் இன்ஹேலர் பலன் தரவில்லை என அர்த்தமா? இன்ஹேலருக்கு பதில் நெபுலைஸர் உபயோகிக்கலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதிநுரையீரல் மருத்துவர் திருப்பதிஇன்ஹேலர், நெபுலைஸர் இரண்டும் வேறு வேறு கிடையாது. மருந்தை காற்றோடு…

WTC Final | ஓவலில் அஸ்வின், ஜடேஜாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் – ஸ்மித் கருத்து | WTC Final Facing Ashwin Jadeja at The Oval will be a challenge steve Smith

லண்டன்: வரும் 7-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எந்த அளவு உதவும் என்பதை ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இரு அணி வீரர்களும் இங்கிலாந்தில் இந்தப் போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.…