சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: ஆளுநர் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காவல்துறை மறுப்பு
14 நிமிடங்களுக்கு முன்னர்சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை அடுத்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்துத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்நிலையில், சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது, சிறுமியர்கள் அதனால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில்…









