யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை – போராட்டத்தில் களமிறங்கிய தமிழர்கள்
கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக4 மே 2023இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.இதன்படி, வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி பகுதியிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிலைகள் இடித்தொழிக்கப்பட்டதாக அண்மையில் கூறப்பட்டு, பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.இந்தியா மற்றும் இலங்கை எல்லையிலுள்ள கச்சத்தீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னணியில், அதற்கு பாரிய…