சிலிண்டருக்கு ரூ.200 மானியம்… மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்த முடிவெடுக்கப்பட்டதாக கூறினார்.அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 38 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், 47 லட்சத்து…









