காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிப்பு
சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஈ.வி.ேக.எஸ்.இளங்கோவன் கூறினார். சென்னை, தலைமை செயலகத்தில் இன்று பிற்பகல் எம்எல்ஏவாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டபிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எல்லோரும் கலந்து கொண்டார்கள். காங்கிரஸ் கொறடா விஜயதரணிக்கு தனியாக ஒரு அழைப்பிதழ் அனுப்பி இருக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து அதற்கான வருத்தத்தையும் தெரிவித்து, அடுத்தமுறை மீண்டும்…









