ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : நாடாளுமன்றம் 12வது நாளாக முடங்கியது: மக்களவை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!!
புதுடெல்லி: ராகுல் தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 12வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கியது முதலே தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முடங்கியுள்ளது. இந்த நிலையில், வழக்கம்போல் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை…









