மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நாற்காலிக்கு சிக்கல்?: சட்டசபை தேர்தலால் பாஜக தலைமை திடீர் முடிவு
போபால்: இந்தாண்டு இறுதியில் மத்தியபிரதேச தேர்தல் வருவதால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. பாஜகவை விட அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால், பின்னர் காங்கிரசில் ஏற்பட்ட பிளவுகளால், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் பலர்…








