கட்சியை அடமானம் வைத்ததால் ஓபிஎஸ் அணி நிர்வாகி திமுகவுக்கு ஆதரவு: பாஜ பிரமுகரும் முழுக்கு
தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவரும், அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான கா.லியாகத் அலிகான், அக்கட்சியில் இருந்து விலகி நேற்று ஈரோட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோரை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் லியாகத் அலிகான் கூறுகையில், ‘2017 வரை எம்ஜிஆர் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வந்தேன். அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்தேன்.…









