Monthly Archives: February, 2023

டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட ஆக்‌ஷன் ஹீரோ புரூஸ் வில்லிஸ்… அறிக்கை வெளிட்ட குடும்பத்தினர்!| American action hero Bruce Willis diagnosed with dementia

அதில், “2022 வசந்த காலத்தில், புரூஸ் அஃபேசியா (Aphasia) எனும் நிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தோம். (அஃபேசியாவால் பாதிக்கப்படுகையில், பேசவும் எழுதவும், மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியாது). இதை அறிவித்ததில் இருந்து அவரின் நிலை மோசமடைந்தது. தற்போது அவர் `ஃப்ரன்டோடெம்போரல் டிமென்ஷியா’ (frontotemporal dementia) என்ற மறதி நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார். இதனால் மூளையில் ஆளுமை, நடத்தை மற்றும் மொழி ஆகியவற்றைக் கையாளும் பகுதிகள் பாதிக்கப்படும்.இந்நோயின் அறிகுறிகளில் ஒன்றான பிறரோடு `தகவல் தொடர்பு’ கொள்ளும் சவால்களை புரூஸ் எதிர்கொள்கிறார்.…

IND v AUS: புஜாராவின் 100வது போட்டி, அஷ்வின் – ஜடேஜாவின் இமாலய சாதனைகள்; முதல் நாள் ஆட்டம் எப்படி?

பார்டர் – கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியிருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் என்று கருதப்படும் புஜாராவுக்கு இந்தப் போட்டி ஒரு மைல்கல். இந்தப் போட்டிதான் அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி.ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனமான் தனது அறிமுகப் போட்டியில் களமிறங்கியிருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன் புஜாராவுக்கு சுனில் கவாஸ்கர் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கி கௌரவப்படுத்தினார். புஜாரா, எப்போதும் போல் அடக்கமாக, “உங்களைப்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,788,478 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,788,478 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,367,359 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,940,754 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,913 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

சொல்லிட்டாங்க…

* 12 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு பாஜ அரசு தீங்கு விளைவித்துள்ளது. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே* ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதே பெரும் மதிப்பு ஆகும். – மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே* பிரதமர் மோடியின் ‘இந்து ராஷ்டிரா’ மகாத்மா காந்தியின் கொள்கைக்கு எதிரானது. இதை முன்னிறுத்துவதன் மூலம் பாஜ இந்தியாவை அழிக்க முயல்கிறது. – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்* தமிழ்நாடு அரசே பருத்தியை…

வழுக்கை தலையை காரணம் காட்டி பணி நீக்கம்; நிறுவனத்திற்கு ரூ.71 லட்சம் அபராதம்! |Man fired from company for being bald, court order to gives 71,000 pounds

ஏதேதோ மழுப்பல் காரணங்களைக் கூறி, நிறுவனம் அவரை வெளியேற்ற முயற்சி செய்தது. அநீதி தாளாமல் தன்னுடைய உயர் பதவியை ராஜினாமா செய்தார், ஜோன்ஸ். தன்னுடைய ராஜினாமா கடிதத்தில், `என்னை மோசமாகக் காட்டுவதற்காக அற்ப அரசியலும், சதியும் நடந்துள்ளது. என்னைக் குறித்துக் குறை கூறும் அறிக்கையில், அப்பட்டமான பொய்கள் இருப்பது குறித்து வருந்தினேன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.அதோடு வழுக்கைத் தலையைக் காரணம் காட்டி, வேலையில் இருந்து தன்னை நீக்கிய நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.இந்த வழக்கை விசாரித்த…

PSL | 36 பந்துகளில் 75 ரன்கள்; பெஷாவரை துவம்சம் செய்த ரைலி ருசோவ் | psl 75 runs 36 balls rilee rossouw who destroyed peshawar

முல்தான்: நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக 36 பந்துகளில் 75 ரன்கள் விளாசியுள்ளார் ரைலி ருசோவ். இதற்கு முந்தைய போட்டியில் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 78 ரன்களை அவர் எடுத்திருந்தார். பெஷாவர் அணிக்கு எதிரான போட்டியில் முல்தான் அணி வீரர் ஷான் மசூத் அவுட் ஆனதும் களமிறங்கினார் ருசோவ். வந்தது முதலே அதிரடி ஆட்டத்தை துவங்கினார். 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 75 ரன்களை குவித்து அவுட்டானார். 12…

பார்பிக்யூ உணவுகளால் உடலுக்கு இத்தனை நோய் அபாயங்கள் வருமா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையின் கீழ் மூடப்பட்ட அறையில் மரம் அல்லது நிலக்கரியிலிருந்து உருவாகும் நெருப்பை பயன்படுத்தி இறைச்சியைப் சமைக்கப் பயன்படுத்தப்படும் பழமையான நுட்பங்களில் ஒன்று பார்பிக்கியூ (barbequed).பார்பிக்யூ உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு வகைகளை ரசித்து உண்பெதென்பது தற்போது ஃபேஷனாகி வருகிறது. இறைச்சி அல்லது கடல் உணவு வகைகளை லேசான வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு அதில் மசாலா தடவி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் வந்து கேட்கும்…

Vikatan Exclusive: “இப்பவும் நான் ஒரு கம்யூனிஸ்ட்தான்!” – சத்குரு ஜக்கி வாசுதேவ் நேர்காணல்| Kadhaipoma With Parveen Sulthana Series With Sadhguru Jaggi Vasudev

மைசூரில் ஆரம்பித்த உங்களது ஆரம்பகட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்…“என் கடந்த கால வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமானதுதான். என்னுடைய அப்பா கண் மருத்துவர். அம்மா ஒரு பக்தியான ஆன்மிக சிந்தனைகள் நிறைந்த பெண்மணி. மூணு பேரு என் கூட பிறந்தவங்க; அதுல நான் தான் கடைக்குட்டி. அப்பாவின் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலையினால் நாங்க ஒரு ஊருன்னு இருந்தது கிடையாது. சொல்லப்போனால் நான் 12 வயது வரை நாத்திகனாக தான் இருந்தேன் எனக்குள்ள நிறைய கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும்.…

ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: உத்தவ் தாக்கரே

டெல்லி: ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என உத்தரவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக உத்தரவ் அறிவித்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்பட்டமான ஜனநாயக படுகொலை எனவும் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். Source link

`மாஸ்க் அணிவதால் எந்தப் பயனுமே இல்லையா… உண்மை என்ன?' – மருத்துவரின் விரிவான விளக்கம்

கொரோனா பரவலுக்குப் பிறகு, உலக முழுவதும் முகக்கவசத்தின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, வெகுஜன மக்கள் முகக்கவசம் பயன்படுத்தினர். இதனால், நோய்ப் பரவல் மற்றும் நோய் பாதிப்பின் வீரியத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க சில பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 12 ஆராய்ச்சியாளர்கள், முகக்கவசம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவில், “கோவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுப்பதில் முகக்கவசம் பெரிதாகப் பயன்தரவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.…

1 22 23 24 25 26 61