அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார் மல்லிகார்ஜூன கார்கே..!
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த நிலையில், இன்று டெல்லியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் அந்த மாநில தலைமையகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. தேர்தலில் தகுதியான 9,915 பிரதிநிதிகள் வாக்களித்தனர்; 96 சதவீதம் வாக்குகள் பதிவாகின.…









