Yearly Archives: 2022

குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – புதுக்கோட்டையில் விஷமச் செயல் – போலீஸ் விசாரணை

கட்டுரை தகவல்புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத விஷமிகள் மலம் கலந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு காணப்படுகிறது.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி…

சொல்லிட்டாங்க…

* நாட்டில் தாழ்வு மனப்பான்மையைத் தூண்ட புனையப்பட்ட வரலாற்று கட்டுக்கதைகள் அதிகமாக பரப்பப்படுகின்றன. – பிரதமர் நரேந்திர மோடி* புதிய கட்சிகள் குஜராத்திற்கு வந்தன. நீண்ட வாக்குறுதிகளை உறுதியளித்தன. தேர்தலுக்கு பின் அவை காணவில்லை. – ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா* விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். – தேமுதிக தலைவர் விஜயகாந்த்* அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் பணிபுரிந்து வரும்…

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்குகிறது? எதில் பார்க்கலாம்? அறிய வேண்டிய தகவல்கள்…

வங்கதேச தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளது. இந்த தொடர் எப்போது தொடங்குகிறது, எதில் நேரலையாக பார்க்கலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியாட்டத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது.வங்கதேசத்துடன் உடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், டெஸ்டில் சிறப்பாக…

ஃப்ரூட் மஃபின்ஸ் | Fruit Muffins

தேவையானவை: மைதா, சர்க்கரை, வெண்ணெய் – தலா 1 கப், பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், வெனிலா எசன்ஸ் – 1 ஸ்பூன், முட்டை – 2, டூட்டி ஃப்ரூட்டி – 2 ஸ்பூன், அலங்கரிக்க – பட்டர் கிரீம்.செய்முறை: வெண்ணெய், சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். முட்டை உடைந்து ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும். அடித்த கலவையில் மைதா, பேக்கிங் பவுடர் எசன்ஸ் சேர்த்து…

மெட்டா இந்தியாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அஜித் மோகன்: ஸ்னாப்பில் இணைகிறார்!

மெட்டா இந்தியாவின் தலைவராக இருந்த அஜித் மோகன் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு நேரடி தொழில் போட்டியாளரான ஸ்னாப் நிறுவனத்தில் இணைவதாக தெரிய வந்துள்ளது.பேஸ்புக் ஆனது மெட்டா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு புதிய மாற்றங்களை செய்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் அதற்கு கடும் போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு போட்டியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பாடுபட்டு வருகின்றனர். அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவுவது போல, தொழில்போட்டி நிறுவனங்களுக்கிடையே…

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராமதாஸ்(பாமக நிறுவன தலைவர்): இந்திய விடுதலைப்  போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணுவின்  98வது பிறந்த நாளில் அவர் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும் என்று  வாழ்த்துகிறேன்.கனிமொழி எம்பி (திமுக துணை பொது செயலாளர்): சமூகத் தொண்டை வாழ்வாகக் கொண்டவர்; பொதுவுடைமை சித்தாந்தத்தின் சிகரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.…

பாதாம் எண்ணெய் பலன்கள் | Benefits of Almond Oil

நன்றி குங்குமம் டாக்டர் பாதாம் எண்ணெயில் நன்மை செய்யும் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் நிறைந்திருப்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. பாதாம் எண்ணெயில் இரண்டு  வகைகள் உள்ளன. ஒன்று இனிப்பு சுவை கொண்டது. மற்றொன்று  கசப்பு சுவை கொண்டது. முதல் வகை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தக்கூடியது. இரண்டாம் வகை வாசனை திரவிய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. பாதாம்  எண்ணெயின் பயன்கள் குறித்து பார்ப்போம்:பாதாம் எண்ணெய் அனைத்து  சரும வகைகளுக்கும் ஏற்றது. எனவே, மிருதுவான, பளபளப்பான சருமத்தைப் பெற விரும்புகிறார்கள்.…

கென்ய கிரிக்கெட் அணியில் இந்தியர் – யார் இந்த புஷ்கர் சர்மா? | indian born pushkar sharma all rounder to play cricket for kenya

மும்பை: இந்தியாவில் பிறந்து வளர்ந்த கிரிக்கெட் வீரரான புஷ்கர் சர்மா, ஆப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம். ஆல் ரவுண்டரான அவருக்கு கென்யாவின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் வாக்கில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்று ஏ-வில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நைரோபி பிராந்திய கிரிக்கெட் சங்க சூப்பர் டிவிஷன் லீக்…

குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!

தொற்றுகள் எளிதாக பரவும் என்பதால் குளிர்காலம் ஒரு கடினமான பருவம். பொதுவாக சீசன் மாறும் போது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக குளிர் சீசனில் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.குளிர் காலத்தில் சில உணவுகள் எடுத்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சீசன் ஆகும். குளிர் சீசனில்…

சோனிட்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 35 வயதான பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது!

அசாம்: சோனிட்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 35 வயதான பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தலை மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்த பெண், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் வீச்சுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். Source link

1 9 10 11 12 13 510