Daily Archives: December 9, 2022

Cyclone Mandous Live: மாண்டஸ் புயல்: கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர்!

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் நகர பேருந்துகள் இயங்காது. Source link

சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது என ஈபிஎஸ் மனு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல என ஈபிஎஸ் மனுவில் கூறியுள்ளார். Source link

FIFA WC 2022 | உலகக் கோப்பையை எந்த அணி வென்றாலும் அது சகாப்தமாக இருக்கும்: எப்படி? | whichever team wins the fifa world cup in qatar it will be an era how

தோகா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் நோக்கில் 8 அணிகள் இப்போது களத்தில் பலப்பரீட்சை செய்கின்றன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அது உலகக் கோப்பை வரலாற்றில் சகாப்தமாக இருக்கும். அது எப்படி என்பதை பார்ப்போம். குரோஷியா, பிரேசில், நெதர்லாந்து, அர்ஜென்டினா, மொராக்கோ, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் என இந்த 8 அணிகள்தான் இப்போது களத்தில் உள்ளன. இந்த அணிகளில் ஏதேனும் ஒரு அணிதான்…

இனி உங்கள் டயட்டி இட்லி சாம்பார் சேர்க்கலாம்… உடல் எடை ஏறாது..! எப்படி தெரியுமா..?

நீங்கள் எடை குறைப்பு முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள் என்றால் தினசரி ஒர்கவுட்ஸ், புதிய டயட், டிடாக்ஸ் ரெசிபிகள் என உங்கள் வாழ்க்கை முறையே முற்றிலும் மாறி இருக்கும்.  நீங்கள் டயட் மூலம் எடை குறைப்பில் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால் காஸ்டலியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தான் டயட்டில் சேர்க்க வேண்டும் என்பதில்லை. நாம் அனைவரும் விரும்பி உண்ணும் எளிய உணவு ஒன்றின் மூலமே எடை குறைப்பை எளிதாக்கலாம். நன்றி

டிசம்பர் 09: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 202 நாளாக மாற்றி அமைக்கப்படவில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

இன்று நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று (9ம் தேதி) பேரூராட்சிகளிலும், 13ம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்த புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள்…

கேட்ச் பிடிக்க சென்ற இலங்கை வீரருக்கு முகத்தில் பந்து தாக்கியதில் 4 பற்கள் உடைந்தது: இணையத்தில் வைரலாகும் வீடியோ

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் டி20 தொடரில் பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற வீரர் மீது பந்து தாக்கி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த காலி கிளாடியேட்டர்ஸ் அணி பேட்ஸ்மேன் நான்கவது ஓவரில் பந்தை மேலே தூக்கி அடித்தார். அதனை கேட்ச் பிடிக்க சென்ற கருணாரத்னே செல்லும் போது…

`கடற்படையில் பாலின சமத்துவம்’- அக்னிபாத் திட்டத்தில் முதல்முறையாக தேர்வான பெண் மாலுமிகள்! – Navy to get Agnipath women sailors for first time

அக்னிபாத் திட்டத்தில் சேர, ஜூலை 15 முதல் 22ம் தேதி வரை, வரம்புகளுடன் விண்ணப்பிக்க இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கால அவகாசம் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 3314 இளைஞர்கள் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் மூலம், இந்தப் பிரிவில் 314 பெண்கள் முதன்முறையாக பெண் மாலுமிகளாக நியமிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. கடற்படைமாதிரிப்படம் இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் கூறுகையில்,“அக்னிபாத் திட்டத்தில் இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 314 பெண்களுக்கும், இதுவரை ஆண்களுக்கு அளிக்கப்படும்…

 பாமக கலந்தாய்வு கூட்டம் ஒத்திவைப்பு – Dinakaran

சென்னை: தைலாபுரத்தில் இன்று  நடைபெற இருந்த 7 மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டங்கள் புயல் எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. பாமக வளர்ச்சிப் பணிகள் குறித்து  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர்,  மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுடனான கலந்தாய்வு  தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில் (இன்று) 9.12.2022 வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாண்டஸ் புயல் வடமாவட்டங்களை இன்று  தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதால் இன்று …