Monthly Archives: November, 2022

பாதிக்குப்பாதி இடங்கள்; அதிமுகவுக்கு பாஜக புதிய நிபந்தனை: அமித்ஷா வருகைக்குப் பிறகு தொகுதிகளில் வேலைகளை ஆரம்பித்த மூத்த தலைவர்கள்

சென்னை: பாதிக்குப்பாதி இடங்கள் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு பாஜக நிபந்தனை விதித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளதோடு, தொகுதிகளில் தாங்களாகவே வேலைகளையும் தொடங்க மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுடன் பாஜக கூட்டணியை தொடங்கியது. முதலில் நடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. அதில் கூட்டணிக் கட்சிகளுக்கு நாங்கள் தொகுதிகளை பிரித்துக் கொடுக்கிறோம். எங்களுக்கு மொத்தமாக சீட் கொடுங்கள் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல், எடப்பாடி…

சருமத்தை வளமாக்கும் வால்நட் எண்ணெய்! | Walnut oil that enriches the skin!

நன்றி குங்குமம் டாக்டர்மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்ட வால்நட். உடலுக்கும்,  மூளைக்கும்  பல்வேறு நன்மைகளை செய்கிறது., சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் கூட  வால்நட் அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவது எவ்வாறு என்று பார்ப்போம்:வால்நட்டில் காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளன.…

தோனியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வர நினைக்கிறதா பி.சி.சி.ஐ? பின்னணி என்ன? | BCCI plans to bring back Dhoni to Team India

T20 உலகக்கோப்பையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான  போட்டியில் இந்தியா தோல்வியுற்றது குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் தோனியை நியமிப்பதற்கு பி.சி.சி.ஐ திட்டமிட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம், கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐ.சி.சி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இதை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருந்து அனைத்து ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்றுத் தந்த தோனியை இந்திய அணியின் முக்கியப் பொறுப்பில் நியமித்து எதிர்கால வீரர்களுக்குப்…

திட்டமிட்டபடி கலைஞர் நினைவிட பணி: அமைச்சர் சாமிநாதன்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணி திட்டமிட்டபடி  நடைபெறுகிறது என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுசூழல் அனுமதி கிடைத்துள்ளது. மழை காரணமாக கலைஞர் நினைவிட கட்டுமானப் பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். Source link

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். Source link

Doctor Vikatan: வீஸிங்கால் அவதிப்படும் மாமனார்… வீட்டிலேயே நெபுலைஸர் பயன்படுத்துவது சரியா? | doctor vikatan – wheezing… Is it ok to use nebulizer at home?

நெபுலைஸரில் கொடுக்கப்படும் மருந்துகளில் ஒன்று பிராங்கோடைலேட்டர் (Bronchodilator). இவை சுவாசத்தை எளிதாக்கும். மற்றொன்று மைல்டான ஸ்டீராய்டு. 65 வயதில் உங்கள் மாமனாரால் சுவாசிக்க முடியும் என்ற நிலையில் ரெவலைஸர் (Revolizer) என்ற கருவியைப் பயன்படுத்தலாம். இதுவும் கையடக்க கருவிதான். அதில் அந்தந்த நேரத்துக்கான டோஸேஜில் கேப்ஸ்யூலை போட்டு மூட வேண்டும். அப்போது அந்தக் கருவியே கேப்ஸ்யூலுக்குள் ஓட்டை போட்டுவிடும். இதை வாயில் வைத்து உறிஞ்ச வேண்டும். அதன் மூலம் மருந்து உள்ளே போகும்எனவே நீங்கள் உங்கள் மருத்துவரைக்…

கால்பந்து திருவிழா: நடப்பு சாம்பியன் அங்கம் வகிக்கும் குரூப் ‘டி’ | Football Festival: Defending champions form Group D

உலகக் கோப்பை நெருங்கும் போது, சில அணிகள் கோப்பையை வெல்வதற்கான யதார்த்தமான வாய்ப்பைக் கொண்டிருப்பது தெளிவாக தெரியும். அவற்றில் ஒன்றுதான் பிரான்ஸ் அணி. நடப்பு சாம்பியனான பிரான்ஸ் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போராடும் குணத்துக்கும், உறுதிக்கும் பெயர் பெற்ற டென்மார்க், ஆஸ்திரேலிய அணிகளும், ஆப்பிரிக்க அணியான துனிசியாவும் இடம் பெற்றுள்ளன. சுவாரஸ்யமாக 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பையிலும் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றிருந்தன. இரு முறை சாம்பியனான…

இந்த 5 விதைகள் போதும் – ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்!

பரங்கி விதைகள்: சாதாரணமாக பரங்கிக்காய் கூட்டு செய்து சாப்பிடும் போது, அதில் உள்ள விதைகளை நாம் தூக்கி எறிந்து விடுகிறோம். பரங்கி விதைகளின் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை. அதில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா-6 கொழுப்புகள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நன்றி

`திறமைக்கு ஏது தடை!’ அர்ஜுனா விருது பெறும் மதுரையின் மகள் ஜெர்லின் அனிகா | Arjuna award announced for Berlin anika

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்தவர் சில மாதங்களுக்கு முன் பிரேசிலில் நடைபெற்ற 24-வது செவித்திறன் குறைந்தவர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று அதில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஜெர்லின் அனிகாதொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் அபினவ் சர்மாவுடன் இணைந்து மலேசியாவின் பூன் – டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றார்.குழு பேட்மிட்டன் போட்டியிலும் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை நாட்டிற்காக பெற்றுத்…

தமிழகத்துக்கு 7 மருத்துவக்கல்லூரி ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய அரசின் சார்பில் நான்காவது கட்டமாக 100 மருத்துவ கல்லூரிகளை 2027ம் ஆண்டுக்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருச்சிக்கு அருகில் உள்ள பெரம்பலூர், புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், அவற்றைத் தொடங்க 6 கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசு…

1 28 29 30 31 32 61