முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என ஓபிஎஸ் அணி அறிவிப்பு: நிரூபிக்காவிட்டால் எடப்பாடி ஓய்வெடுக்க கோரிக்கை
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினை ரகசியமாக சந்தித்து பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்றும், அதை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயாராக இருக்கிறோம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் ஜெசிடி.பிரபாகர் அறிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெசிடி.பிரபாகர், பி.எச்.பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் கூட்டாக நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள்…








