கள்ளக்குறிச்சி சம்பவம்: யூடியூப் சேனல்கள் நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற கோருவது ஏன்?
நபில் அஹமதுபிபிசி தமிழுக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு உள்ளது என்று யூடியூப் சேனல்களை நடத்தி வரும் சில பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அதில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார் தரப்பிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பிலும் கூறப்பட்டது.…









