சோனியா, ராகுல் ஆதரவுடன் காங். தலைவர் பதவிக்கு கெலாட் போட்டி: சசி தரூர் உள்பட மேலும் சிலர் களமிறங்க தீவிரம்; வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
கொச்சி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடாதது உறுதியான நிலையில், சோனியா, ராகுல் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்தலில் களமிறங்குவதை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து சசிதரூர் உள்பட மேலும் சிலர் போட்டியிட உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 19ம் தேதி…









