Daily Archives: September 20, 2022

IND v AUS: உலகக்கோப்பை லெவனைத் தேடும் முயற்சி; ஆசியக்கோப்பையின் தோல்வியிலிருந்து மீளுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கவிருக்கிறது. உலகக்கோப்பைத் தொடருக்கு ஏறக்குறைய ஒரே ஒரு மாதம் மட்டுமே இருக்கையில் இந்தத் தொடர் தொடங்கவிருப்பதால் உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாகவே இந்தத் தொடர் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய அணி சில விஷயங்களில் செட்டில் ஆவதற்கு இந்தத் தொடரைக் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்போடு இருக்கிறது. இந்தத் தொடரின் முக்கியத்துவம் பற்றி ஓர் அலசல் இங்கே…IND v PAK | ஆசியக்கோப்பை தோல்வி”இனி புது முயற்சிகள் இல்லை!”…

Vintage MS Dhoni Seals Chennai Super Kings Play-off Berth with a Six vs Sunrisers Hyderabad, மிட்விக்கெட்டில் காணாமல் போன தல தோனியின் ‘பஞ்ச்’ சிக்சர் – News18 Tamil

சென்னை அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்களையும், பிராவோ 2 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். Source link

மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக இருக்கும் 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மியான்மர் நாட்டில் பிணைக் கைதிகளாக இருக்கும் 60 தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்த்திலுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மியான்மர் நாட்டில் உள்ள மியாவாடி காட்டுப் பகுதிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உள்ளிட்ட 300 இந்தியப் பொறியாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளார்கள். அங்கு சட்டவிரோத குற்றங்களை செய்யுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் அடி, உதை, உடலில் மின்சாரம் பாய்ச்சுதல்…

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமளவுக்கு காய்ச்சல் பாதிப்பில்லை – மா.சுப்ரமணியன்| There is no need to give holidays to schools – M. Subramanian

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாகப் பரவவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். சமீப நாள்களில் டெங்கு மற்றும் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சல் பரவி வருகிற நிலையில் புதுச்சேரி மாநில அரசு, 5 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் அதற்கான அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்… அமைச்சர் மா.சுப்ரமணியன்”தமிழ்நாட்டில்…

நாங்கள் வீரர்கள், ரோபோக்கள் இல்லை – சமூக வலைதள விமர்சனங்களுக்கு வினேஷ் போகத் பதிலடி | We Are Humans, Not Robots – Vinesh Phogat Lashes Out At Critics

புதுடெல்லி: செர்பியாவின் பெல்கிரேடு நகரில்நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது முறையாக பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போகத். அவர், கடந்த 2019-ம் ஆண்டும் பதக்கம் வென்றிருந்தார். இந்தத் தொடரில் வினேஷ் போகத் தகுதி சுற்றில் 0-7 என்றகணக்கில் மங்கோலிய வீராங்கனையிடம் தோல்வி கண்டிருந்தார். இதனால் சமூக…

வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க…

இன்றைக்கு 50 வயதைக் கடந்தாலே எண்ணற்ற உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. மாறிவரும் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகள் தான் இதுப்போன்ற நிலைக்கு காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நன்றி

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.4,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source link

மாவட்டச் செயலாளர் தேர்தலுடன் மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: மாவட்ட அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது குறித்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக 15வது பொதுத் தேர்தலில், பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகரத் தேர்தல்கள் முடிவுற்றதை தொடர்ந்து, நடைபெற உள்ள மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில், மாவட்டக் கழக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, மாவட்டக் கழகத்திற்கென ஒரு அவைத்தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், துணைச் செயலாளர்­கள் மூன்று பேர்(கட்டாயமாக ஒருவர் பொதுப்பிரிவினராகவும், ஒருவர் ஆதிராவிடர் அல்லது மலைவாழ்…

ஹீரோ ஒர்ஷிப் செய்யாதீர்கள் கௌதம் கம்பீர் காட்டம்

ஒளிபரப்பாளர்களாக இருக்கட்டும் மீடியாக்களாக இருக்கட்டும் ரசிகர்களாகவே இருக்கட்டும் இந்திய கிரிக்கெட்டே ஏதோ கோலி, தோனி, கபில் தேவ் என்று அவர்களையே, பிராண்டாக்கி கொண்டாடுகிறது. யாராக இருந்தாலும் அவரை ஹீரோ ஒர்ஷிப் செய்யக் கூடாது. மற்ற வீரர்களையும் கொண்டாட வேண்டும் என்று கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.“ஓய்வறையில் நாம் ஹீரோக்கள் எனும் பூதங்களை உருவாக்க வேண்டாம், இந்திய கிரிக்கெட் தான் அங்கு பூதமாக இருக்க வேண்டும். தனிநபர் ஹீரோ பூதங்களை உருவாக்காதீர்” என்கிறார் கவுதம் கம்பீர். மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ்…

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்… வைரலான வீடியோ; டாக்டர் மீது எஃப்.ஐ.ஆர்!

விலங்குகளின் மீதான கொடூரமான தாக்குதல்கள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் நாய் ஒன்றை காரில் கட்டி, காரை வேகமாக ஓட்டி நாயை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கண்டனங்களையும் பெற்று வருகிறது. ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டுள்ளார். சாலையில் இன்னும் பல வாகனங்கள் சென்று கொண்டிருக்க, நாயை காரில் கட்டி வேகமாகச் சாலையில் ஓட்டி சென்றுள்ளார். காரின் வேகத்திற்குப் பிடிகொடுக்க முடியாமல், நாய்…