Daily Archives: September 16, 2022

கட்சியின் தலைமை பொறுப்பில் எடப்பாடி இருந்தால் அதிமுகவை அழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்தால் பரபரப்பு; ஓபிஎஸ் அணிக்கு திடீர் ஆதரவு

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறும்போது, கட்சி தலைமை பதவியில் எடப்பாடி இருக்கும் வரை அதிமுகவை காப்பாற்ற முடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்து பேசினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா…

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது உண்மையா? | doctor vikatan – Is it true that both should eat together during pregnancy

Doctor Vikatan: நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்தக் காலத்தில் வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடச் சொல்லி வீட்டில் எல்லோரும் வற்புறுத்துகிறார்கள். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்கிறார்கள். அது உண்மையா? கர்ப்ப காலத்தில் எத்தனை கிலோ எடை கூட வேண்டும்? எடை குறைவாக இருப்பது பிரச்னையா? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச்…

கேரி கிர்ஸ்டன் அகாடமி சென்னையில் தொடக்கம் | Gary Kirsten Academy opens in Chennai

சென்னை: சென்னை பெரம்பூரில் உருவாகி வரும் எஸ்பிஆர் சிட்டியில் கேரி கிர்ஸ்டன் கிரிக்கெட் அகாடமியை ஹாட்ஃபுட் ஸ்போர்ட்ஸின் ஒத்துழைப்போடு தி ஸ்ரீராம் யுனிவெர்சல் ஸ்கூல் தொடங்கி உள்ளது. மேலும் கூடுதலாக தென் இந்தியாவின் முதல் பேடல் டென்னிஸ் ஆடுகளமும் தொடங்கப்பட்டுள்ளது. கேரி கிர்ஸ்டன் அகாடமியில் 10 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர் என்ற முறையில் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு முகாமில் கேரி கிர்ஸ்டன் கலந்துகொண்டு இளம் வீரர்களுக்கு பயிற்சி ஆலோசனைகள் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பேடல்…

ரொம்ப டல்லா பீல் பண்றீங்களா..? உங்களை ஹேப்பி மூடிற்கு கொண்டு செல்லும் இந்த உணவுகளை சாப்பிடுங்க…

சோகமான மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் எனில் உடனே அதிலிருந்து வெளியேற சில உணவுகள் இருக்கின்றன. அவை உங்களை உடனே ஹேப்பி மூடிற்கு மாற்றலாம். நன்றி

“நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன்!” – ரோஜர் ஃபெடரரின் ஓய்வுச் செய்தி சொல்வது என்ன? | Tennis legend Roger Federer’s retirement message

அடுத்த வாரம் ஆட இருக்கும் லேவர் கப் போட்டிகள்தான் எனது கடைசி ஏ.டி.பி டென்னிஸ் போட்டி. எதிர்காலத்தில் நான் டென்னிஸ் ஆடலாம். ஆனால் கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். கசப்பு மருந்தை சுவைப்பது போன்ற முடிவுதான் இது. டென்னிஸ் எனக்குக் கொடுத்த அத்தனை அனுபவங்களையும் இனி இழந்துவிடுவேன்.ஆனால், நான் கொண்டாடவும் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தப் பூமியிலேயே அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக என்னை நினைக்கிறேன். எனக்கு டென்னிஸ் அபூர்வ திறமையாக வாய்த்தது. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு…

கட்சி அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் பேனர்கள் அகற்றம்

சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உருவம் உள்ள பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தின் உள்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதில் அனைத்து பேனர்களிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று எழுதப்பட்டு, அவர்களின் பெரிய படங்களும் இடம் பெற்றிருக்கும். கடந்த ஜூலை 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது அங்கிருந்த அனைத்து பேனர்களில்…

tennis legend roger federer announces his retirement

அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தான், தனது இறுதி டென்னிஸ் போட்டியாக இருக்கும் என டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரெர் அறிவித்துள்ளார்.டென்னிஸ் அரங்கில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் ரோஜர் பெடரர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 லேவர் கோப்பை போட்டி தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் முற்றிலுமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.அந்த அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகள் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை…

லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள்; 6 பேர் கைது

லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள்; 6 பேர் கைதுஉத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமிகளை கடத்தியதாக அல்லது வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். Source link

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் அமமுக இருக்கும்: டிடிவி தினகரன் பேச்சு

திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் அமமுக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது; சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி கிடைத்திருக்காது. அண்ணா, எம்ஜிஆர், அம்மா என்ற பெயர்களில் உள்ள எழுத்துகள் உலகெங்கும் தமிழ் உள்ளவரை ஒலிக்கும்.…