காங். முன்னாள் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா
சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஒன்றிய, மாநில முன்னாள் அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரும்பாக்கம் பழைய பஸ் நிலையம், திருவீதி அம்மன் கோயில் தெருவில் நாளை மாலை 6 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமையில் நடக்கிறது. மாநில பொதுச்செயலாளர் (ஆர்டிஐ) பிரிவு முகப்பேர் மதன்பாலு முன்னிலை வகிக்கிறார். இதில், காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை, விஷ்ணுபிரசாத்…

