“கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்!” – பினராயி விஜயன் திட்டவட்டம் | Kerala will not implement CAA, says CM Pinarayi Vijayan
கேரள முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சி.ஏ.ஏ) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். `கொரோனா தொற்று முடிவுக்கு வரும் காலகட்டத்தில், சி.ஏ.ஏ-வை நிச்சயம் அமல்படுத்துவோம்!’ என கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்த நிலையில், பினராயி விஜயன் இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கிறார். பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கேரளாவில் ஆட்சிக்குவந்து ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி, சிறப்பு விழா ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பினராயி…









