IPL 2022 | சென்னைக்கு மங்கிய பிளே ஆப் வாய்ப்பு – பெங்களூருவிடம் தோல்வி | IPL 2022 | Royal Challengers Bangalore won by 13 runs against Chennai Super Kings
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. 174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணை பவர் பிளே முடியும்வரை நீடித்தது. 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்த போது ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக நடையை கட்டினார். அடுத்த சில நிமிடங்களில் ராபின் உத்தப்பா ஒரு…








