விடுதலைப்புலிகள் முன்னாள் போராளி பிள்ளையான் கைது – இலங்கையில் நடப்பது என்ன?

Share

இலங்கை, விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் , பிள்ளையான், சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
படக்குறிப்பு,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 72 மணி நேரம் தடுத்து வைக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இன்றிரவு (ஏப்ரல் 8) போலீஸாரினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பிபிசி தமிழிடம் உறுதி செய்தனர்.

கைது செய்யப்பட்டமைக்கான காரணம் கூறப்படாத நிலையில், பிள்ளையான் கொழும்புக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவினர் கட்சியினருக்கு அறிவித்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com