வறுத்த கோழி இவ்வளவு விலை கம்மியா? விஜயவாடா சிக்கன் மூரி மசாலா.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Share

இன்றைக்கு விதவிதமாக விற்பனைக்கு வரக்கூடிய உணவுப் பொருள்களின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. பெரிய பெரிய ஹோட்டல்கள் முதல் தெருவோரக்கடைகளிலும் விற்பனைக்கு இருக்கும் புதிய டிஸ்களை மக்கள் விரும்பி ருசிக்கிறார்கள். இந்த வரிசையில் பிரபலமான மிர்ச்சி மசாலாவைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேசமயம் மிகச்சிலருக்கு மட்டும் தெரியக்கூடிய வகையில் அமைந்துள்ளது தான் விஜயவாடாவின் சிக்கன் மூரி மசாலா. மக்களின் விருப்பமான உணவுப்பொருளாக மாறியுள்ள நிலையில், இதன் சிறப்பு குறித்து நாமும் இங்கே அிறந்துக் கொள்வோம்.

விஜயவாடா ஸ்பெஷல் சிக்கன் மூரி மசாலா:

விஜயவாடாவின் குருநானக் நகர் காலனியின் பிரதான சாலையில் செயல்பட்டுவருகிறது சாவித்ரி மூரி மசாலா ஸ்டால். வறுத்த சிக்கன் மற்றும் பொரி கலவையுடன் தயார் செய்யப்படும் சிக்கன் மூரி மசாலா இந்த கடையின்ஸ்பெஷல். அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் தயார் செய்யப்படும் இந்த உணவின் சுவை அனைவரையும் இந்த ஸ்டால் பக்கம் இழுத்துள்ளது. இதனால் தான் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து வேலைநாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி அதாவது கடை திறந்திருக்கும் வரை கூட்டம் அலைமோதுகிறது. இந்த சிக்கன் மூரி மசாலா மட்டுமில்லாது,விஜயவாடாவின் புகழ்பெற்ற சாவித்ரி மூரி மசாலா ஸ்டாலில், முட்டை கலவை மசாலா, தக்காளி பஜ்ஜியுடன் கலவை மசாலா, பட்டாணி பஜ்ஜி, பிரிஞ்சி பஜ்ஜி போன்ற பராம்பரிய உள்ளூர் உணவுகளும் பேமஸாக உள்ளது.

இதுக்குறித்து சாவித்தி மூரி மசாலா ஸ்டால் உரிமையாளர் துர்கா பிரசாத் கூறுகையில், நாங்கள் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னதாக விஜயவாடாவில் மச்சிலிப்பட்டினத்தில் கடையை நடத்தி வந்தோம். பின்னர் குருநானக் பகுதிக்கு மாற்றம் செய்துவிட்டோம். இங்கு வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுகிறது.ஞாயிற்றுக்கிழமைத் தவிர அனைத்து வேலை நாள்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி ஸ்டால் திறந்திருக்கும் என்கிறார். மேலும் நாங்கள் விற்பனை செய்யும் சிக்கன் மூரி மசாலா போன்ற பிற திண்பண்டங்களின் விலை குறைந்தபட்சம் ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் எங்களுக்கு தினசரி ரூ.2500 முதல் ரூ. 3000 வரை வருமானம் ஈட்டுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். பொரி, ப்ரட், சிக்கன் மசாலா மற்றும் லெக் பீஸ் போன்றவற்றை கலந்து சுவையோடு வழங்குவதால் எங்கள் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் இருப்பதாக மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க | திருப்பதி லட்டை ஓரம் தள்ளும் கிராமத்து லட்டு.. படையெடுக்கும் மக்கள்.. எங்கு தெரியுமா?

இதுக்குறித்து இன்ஸ்டாவில், வெளியான வீடியோவில், வறுத்த கோழியின் விலை இவ்வளவு கம்மியான விலையில் விற்கிறீர்களா? என கேள்வி எழுப்பது போன்று அமைந்திருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் கடையின் உரிமையாளர் நாங்கள் “நான் உள்ளூர் விற்பனையாளரிடமிருந்து 50 ரூபாய்க்கு 250 கிராம் போன்லஸ் சிக்கன் வாங்குகிறாம் என்றும், தரமான உணவுகளைத் தான் வழங்குகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதனால் இணையத்திலும் விஜயவாடாவின் சிக்கன் மூரி மசாலா புகழ்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com