மொறுமொறு புளிப்பு முறுக்கு சாப்பிட்டுருக்கீங்களா? – திருச்சியில் ஃபேமஸாகும் பாரம்பரிய உணவு வகைகள்..

Share

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளது வைபவம் என்னும் உணவு கடை. இந்த கடையில் தான் பாரம்பரியமான உணவு வகைகள் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த முறுக்கில் எலுமிச்சை சாறு சேர்த்து தயார் செய்கின்றனர்.

இது மட்டுமில்லாமல் சேவை, நெல்லிக்காய் பூண்டு பொடி, வேப்பம்பூ பொடி, சிறுதானிய உருண்டைகள், பல்வேறு ஊறுகாய் வகைகள், சீடை வகைகள், கடலை உருண்டைகள் சிறுதானிய நூடுல்ஸ், வத்தல் வகைகள், சின்ன வெங்காய ஊறுகாய், தேன்குழல், கை முறுக்கு போன்றவைகளும் இங்கு கிடைக்கின்றன. மேலும் சோடா, டால்டா மாதிரியான எந்த பொருட்களும் பயன்படுத்தப்படாமல் வெண்ணெய், நெய் போன்றவைகள் கொண்டு தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் ஜனனி கூறுகையில், “நானும் என் கணவரும் 10 வருடங்களாக ஐடியில் பணிபுரிந்தோம். அதன் பிறகு கொரோனா நேரத்தில் எங்கள் சொந்த ஊருக்கு வந்தோம். இந்த மாதிரியான பாரம்பரிய உணவு வகைகள் மீது கொண்ட ஆர்வத்தால் இதை ஆரம்பிக்கலாம் என்று எண்ணினோம். பாரம்பரியமான உணவு வகைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது.

திருச்சியில் ஃபேமஸாகும் பாரம்பரிய உணவு வகைகள்

2 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கு அதிரசம், சீடை, முறுக்கு, ஊறுகாய் வகைகள், சிறு தானிய உருண்டைகள், சிறுதானிய நூடுல்ஸ் வகைகள் போன்றவை செய்கிறோம். வியாழக்கிழமைகளில் போளி, வெள்ளிக்கிழமைகளில் சேவை போன்ற உணவு வகைகளும் கிடைக்கும்.

இதையும் படிங்க : வெங்காயம் விலை கடும் சரிவு.. திண்டுக்கல்லில் ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிறோம் வாடிக்கையாளர்கள் விருப்பப்படி தயார் செய்து கொடுப்பதே எங்களின் வெற்றிக்கு காரணம்” என்று கூறினார்.

இந்த உணவகம் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்குகிறது. இந்த மாதிரியான பாரம்பரிய உணவு வகைகளை விரும்புகிறவங்களா இருந்தீங்கன்னா கண்டிப்பா இங்க இருக்க உணவு வகைகளை ட்ரை பண்ணுங்க.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com