மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -123

Share

மாதவிடாய் காலத்து செக்ஸ் பற்றிய பயம் அறிவியல் வளர்ந்த இந்தக் காலக்கட்டத்திலும் இருக்கிறது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரியை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார்.

”மாதவிடாய் நாள்களில், அறிவியல் படித்த மருத்துவர்களும் பூஜையறைக்குச் செல்ல தயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தைப்போல, மாதவிடாய் ஆன பெண்கள் சமையலறைக்குள் செல்லக்கூடாது; அவர்கள் தனியறையில் இருக்க வேண்டுமென்கிற வழக்கம் இன்றைக்கும் சில குடும்பங்களில் இருக்கிறது. மேற்படிப்பெல்லாம் முடித்து, வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள்கூட 3 நாள்கள் மனைவியை தனியறையில் உட்கார வைக்கிறார்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியர் ஒருவர், மாதவிடாய் ஆன மனைவியை இரவு முழுவதும் பால்கனியில் உட்கார வைத்த சம்பவங்களைக்கூட கேள்விப்பட்டிருக்கிறேன்.

Dr. Kamaraj

நம் ஊர் கிராமங்களில், மாதவிடாயின்போது மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட ஆண்களை ‘ஜன்னி வந்துடும். செத்துப்போயிடுவே’ என்று பயமுறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள் வீட்டுப் பெரியவர்கள். மருத்துவர்களும், ‘இவர்களிடம் மாதவிடாய் பற்றிய அறிவியலை எடுத்துச்சொன்னாலும் கேட்க மாட்டார்கள்’ என்று வேறுவழியில்லாமல் பி-காம்ப்ளெக்ஸ் ஊசியைப்போட்டு அனுப்பி வைப்பார்கள்.

அந்த ஆண் எம்.டெக் முடித்து ஐ.டி.யில் வேலைபார்க்கிறார். அவருடைய மனைவியும் நன்கு படித்தவர். குழந்தையின்மை சிகிச்சைக்காக எங்களிடம் வந்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு செக்ஸ் தெரபி கொடுத்துக்கொண்டிருந்தேன். மனைவிக்கு பீரியட்ஸ் வந்தால் இருவரும் சிகிச்சைக்கு வர மாட்டார்கள். ‘மாதவிடாய் ரத்தம் அசுத்தம் கிடையாது. அதிலிருப்பது ஸ்டெம் செல்கள். அதை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தலாம் என்று ஈரானின் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று சொல்லியிருக்கிறது. மத நம்பிக்கைகள் அதிகமான, கட்டுப்பாடுகள் நிறைந்த ஈரானிலேயே அறிவியல் சிந்தனைகள் வளர்ந்துவிட்டன. எம்.டெக் படித்த நீங்கள் இப்படி சிந்திக்கலாமா’ என்று புரிய வைக்க முயற்சி செய்தாலும், வீட்டுப் பெரியவர்கள் சொல்கிற மாதவிடாய், ஜன்னி வந்து விடும் என்பதையே நம்பிக் கொண்டிருந்தார்கள் கணவன், மனைவி இருவரும்.

Sex Education

இப்போதும், ‘பீரியட்ஸ் அப்போ செக்ஸ் வெச்சுக்கிட்டா ஜன்னி வந்துடுமா டாக்டர்’ என்கிற கேள்வியை வாரத்துக்கு ஒருமுறையாவது சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அறிவியல் அடிப்படையிலான விளக்கத்தைச் சொல்லி அனுப்புகிறேன். மாதவிடாயின்போது உறவுகொள்வதில் ஒர் எச்சரிக்கையை மட்டும் ஆண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பாலியல் நோய்கள் இருக்கிற பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்டால், அந்த நோய்கள் ஆண்களுக்கும் வரும். மற்றபடி, மாதவிடாய் நேரத்து செக்ஸால் எந்தப் பிரச்னையும் வராது” என்கிறார் டாக்டர் காமராஜ்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com