சித்திரை முடிந்தும் சூரியன் உஷ்ணத்தை தனித்தபாடில்லை என மக்கள் புலம்பிக்கொண்டிருந்த வேளையில் பரவலாக மழை பெய்து உஷ்ணத்தை குறைந்துள்ளது. மாலை வேளையில் பெய்து கொண்டிருக்கும் மழைக்கு இதமாக பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை சாப்பிட்டால் எப்படி இருக்கும். கையில் டீ கப்புடன் மழை.. தேநீர்.. ராஜா.. என ஸ்டேட்டஸ் போட ரெடி ஆகிட்டீங்களா. டீ மட்டும் சாப்பிட்டால் இதமா இருக்குமா கடிக்க ஒரு காரம் வேண்டாமா..
டீ அல்லது காபி பிரியரா கூட நீங்க இருங்க ஒரு கப் டீ -க்கு கம்பெனியா சூடாக வீட்டிலேயே முட்டை வைத்து போண்டா செய்து சாப்பிடலாமா. இந்த முட்டை போண்டா செய்வதற்கு ரொம்ப நேரம் ஆகாது. சுலபமாக செய்திடலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை – 6 (வேக வைத்தது)
கடலை மாவு – 1 கப்
பேக்கிங் சோடா – 1 சிறிதளவு
பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து வைக்க வேண்டும்.
2. ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முட்டை பஜ்ஜியை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி எடுக்க வேண்டும்.
4. பின்னர் அதனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
5. அதே போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா ரெடி…
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.